“பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் : ஜனாதிபதி வெளியேறுமாறு தெரிவித்தால் வெளியேறுவோம்”

0
132

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு தொடர்ந்து அரசாங்கத்தில் இருப்போம். ஜனாதிபதி கூறினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்தது.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அமைச்சர்களான எஸ்.பி திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கூறும் போது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு தொடர்ந்து அரசாங்கத்தில் இருப்போம். ஜனாதிபதி கூறினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம்.

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திலேயே நாம் உள்ளோம். ஆகவே அவர் கூறினால் மாத்திரமே அரசாங்கத்தில் இருந்து நாம் வெளியேறுவோம் என கூட்டாகத் தெரிவித்தனர்.

(Virakesari)

LEAVE A REPLY