திருகோணமலை-மயிலவெவ பகுதியில் வீதியோரத்தில் சடலம் மீட்பு

0
106

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலவெவ பகுதியில் வீதியோரத்தில் மீட்கப்பட்ட சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்துமாாறு நேற்றுமாலை (03) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கோமரங்கடவெல, 05ம் கட்டை பகுதியைச்சேர்ந்த ஆனந்தகே திலீப் ரஞ்சன (38 வயது) என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோமரங்கடவெல பிரதேச சபை பெகோ இயந்திரத்தின் உதவியாளராக கடமையாற்றி வரும் இவர் பதவிசிறிபுர பகுதியிலிருந்து கடமையை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வேளை யானையைக்கண்டு பயந்து வீழ்ந்ததில் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் முகத்தில் காயம் காணப்படுவதாகவும் விபத்தினாலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY