நகரைச் சுத்தமாகப் பேண குப்பைகளை தரம்பிரிக்குமாறு வேண்டுகோள்

0
179

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

‘ஏறாவூர் நகரைப் பசுமையாக்குவோம்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள திண்மக் கழிவகற்றல் பணிகளுக்கு பொதுமக்களை பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரும் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் ஏறாவூர் நகர சபையால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திண்மக் கழிவகற்றல் நகர சுத்தி தரம்பிரிக்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகரிலுள்ள வாசிகசாலைகள், பொதுச் சந்தை, வாவிக்கரை பொழுது போக்குப் பூங்கா மற்றும் மக்கள் கூடுமிடங்களில் நகரசபை ஊழியர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கழிவுகளைத் தரம்பிரித்து வழங்குவதன் மூலம் சுத்தமான நகரை உருவாக்குவதற்கான முயற்சியில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பைத் தரவேண்டும் என ஏறாவூர் நகரசபை நிருவாகம் வலியுறுத்தியுள்ளது.

0 1 3

LEAVE A REPLY