காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக தவிசாளரின் அதிரடி நடவடிக்கை

0
523

(விஷேட நிருபர்)

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிராதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னாள் சட்ட விரோதமாக வர்த்தக நிலையக் கழிவுகளை வைத்து பிரதான வீதியை அசுத்தப்படுத்தும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட 117 பேருக்கு எதிராக காத்தான்குடி நகர சபையினால் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காத்தான்குடி நகர சபையினால் பிரதான வீதியில் தினமும் வர்த்தக நிலையங்களின் கழிவுகள் முறையாக அகற்றுப்பட்டு வருகின்றன.

இதற்கு புறம்பாக சில வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையக் கழிவுகளை வர்த்தக நிலையங்களுக்கு முன்னாள் வைக்கின்றனர். இதனால் பிரதான வீதி அசுத்தமடைவதுடன் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.

இவைகளை கருத்திற் கொண்டே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் தலைவராக நேற்று (02) திங்கட்கிழமையன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.எச்.எம்.அஸ்பர் அதிரடி நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY