புனானையில் பஸ்சும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து: 28 பேர் காயம்

0
199

(வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் இன்று (03) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருபத்தெட்டு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் இருந்து பொலநறுவை சுங்காவில் பகுதியை நோக்கி வந்த தனியார் பஸ்சும் பொலநறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த டிப்பர் வாகனமும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதிலயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் பணிரெண்டு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 4 5

LEAVE A REPLY