பள்ளிவாசல் மீதுள்ள தேன் கூட்டிலிருந்து பொதுமக்களை கொட்டும் தேனீக்கள்

0
111

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் அமைந்துள்ள தேன்கூட்டிலுள்ள தேனீக்கள் கலைந்து சுற்றுப்புறத்திலுள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு கொட்டுவதனால் மக்கள் பெரிதும் அசௌகரிகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு குறித்த பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபவோருக்கும் கொட்டுவதனால் வணக்க வழிபாட்டில் ஈடுபடும் போது சிறமத்துக்கு மத்தியில் ஈடுபடுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்டவர்கள் குறித்த பள்ளிவாசலிலுள்ள தேனீக்களை அப்புறப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

20180330_174806

LEAVE A REPLY