இன ஒற்றுமையை வலுவூட்டும் விஷேட செயலமர்வு

0
67

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்ட சர்வமத குழு (DIRC) இதுவரை காலமும் ஆசியா பவுண்டேசன், பிரித்தானிய தூதரகம் போன்ற முன்னனி நிறுவனங்களுடன் இணைந்து 2 வருடங்களாக சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தி சமூகத்துக்கு சிறந்த சேவையை வழங்கி வருகின்றது.

இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான கலந்துறையாடல் திட்டம் என்ற திட்டத்தினை நோக்காகக் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, இன்னும் இந்த குழுவினுடைய உன்னதமான சேவையை மேலும் மேம்படுத்துவதற்காகவும் அவர்களது சேவையை ஊக்குவிப்பதற்காகவும் ஏப்ரல் 07ம் 08ம் 09ம் ஆகிய 3 தினங்களிலும் ஹபரன ‘விலேஜ் ஹொட்டலில்’ பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய 2 மாவட்டங்களில் இருந்தும் அரச அதிகாரிகள் மதத் தலைவர்கள் உற்பட தெரிவு செய்யப்பட்ட 80 உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர்.

LEAVE A REPLY