மறக்கப்படும் கண்டி வன்முறை – அமைச்சரவையில் விமர்சனம்!!

0
371

கண்டி – திகன வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். இல்லாவிடில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்று அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் கூட்டாக இணைந்து குரல் எழுப்பியதுடன், கடுமையாகவும் விமர்சித்தனர்.

அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. அதில் அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்வாறு விமர்சித்துள்ளனர்.

கண்டி – திகன வன்முறை தொடர்பாக அரசு இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்தும், திருப்திகரமான பதில்கள் எதுவும் தராதது குறித்தும் எமது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசு பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும். உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகளின் குறைபாடுகள் தொடர்பிலும் விசாரிக்கப்படல் வேண்டும்.

இதேவேளை,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், வாழ்வாதாரங்கள், கட்டடங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் ஆகியன பற்றியும் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு முன்னுரிமைகளும் வழங்கப்படல் வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக அசம்பாவிதங்கள் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப ஏற்படாது என்பதையும் அரசு இச்சந்தர்ப்பத்தில் உறுதி செய்யவேண்டும் என்றும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY