கிளிநொச்சியில் சந்திரிக்கா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

0
122

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரத்துங்க கிளிநொச்சியில் இன்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

தேசிய நல்லிணக்க செயலகத்தின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் பளை இந்து ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டம், கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு அமைக்கப்பட்ட உணவு பதனிடல் நிலையம், வட்டக்கச்சி மற்றும் முழங்காவில் பிரதேசத்தில் தேசிய நல்லிணக்கத்தின் செயலகத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றை மக்களின் பாவனைக்குத் திறந்து வைத்தார்.

IMG_9322 (1) IMG_9292-1024x683 f-2-1024x576 f-1-768x432 IMG_9299-750x400

LEAVE A REPLY