காத்தான்குடியில் மூத்த சமூக சேவையாளர் முகைதீன் ஹாஜியார் வபாத்

0
173

(விஷேட நிருபர்)

காத்தான்குடியின் மூத்த சமூக சேiவாளர் முகைதீன் ஹாஜியார் தனது 87 வயதில் இன்று (02) திங்கட்கிழமை காலை வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

இவர் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் அதன் உப தலைவருமாவார்.

காத்தான்குடி அனாதைகள் இல்லத்தின் செயலாளராகவும் இருந்துள்ளதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும் இருந்தார். பல சமூக சேவை நிறுவனங்களிலும் இவர் அங்கத்தவராக இருந்துள்ளார்.

மூத்த சமூக சேவையாளரான இவர் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் வபாத்தானார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கட்கிழமை அஸர் தெழுகையின் பின்னர் புதிய காத்தான்குடி நூறானியா ஜும்ஆப்பள்ளிவாயலில் இடம்பெற்றது.

29695085_2104448179773728_7031822558072957560_n

LEAVE A REPLY