யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொடும்பாவி எரித்து இறுதிக் கிரியை!!

0
293

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரித்து, இறுதிக் கிரியை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவினர் உள்ளிட்ட சிலர் தமது போராட்டத்துக்கு குழப்பம் விளைவிப்பதாகத் தெரிவித்து அதனைக் கண்டிக்கும் முகமாக பல்கலைக்கழக வளாகத்துள் கொடும்பாவி கட்டி இழுக்கப்பட்டு ஒப்பாரி வைத்து யாழ். பல்கலைக்கழக வாசலில் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

LEAVE A REPLY