மருதமுனை மண்ணுக்கு மற்றுமொரு பெருமை: ஐந்து பேர்கள் சமூகப்பணி பட்டதாரிகளாக பட்டம் பெற்றார்கள்

0
270

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சின் கீழும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடனும் இணைந்து காணப்படும் ராஜகிரியவில் அமையப் பெற்றிருக்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (29) கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் 2013/2017 ஆண்டுக்கான சமூகப் பணித் துறையில் நான்கு வருட கால பாடநெறிகளை பூர்த்தி செய்த 86 மாணவர்களும் 07 சமூகப் பணி முதுமாணி பட்டங்களையும் மொத்தமாக 93 பேர்கள் பட்டம் பெற்றார்கள்.

இப் பட்டமளிப்பு வைபவத்துக்கு சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சின் செயலாளர் திருமதி சிரானி வீரகோன், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பி.எஸ்.எம்.குணரட்ண உட்பட தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரிட்லி ஜயசிங்க, விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

FB_IMG_1522421352910 FB_IMG_1522421367679 FB_IMG_1522421370880 FB_IMG_1522421880416 FB_IMG_1522421891348 FB_IMG_1522421912243

LEAVE A REPLY