நாவலப்பிட்டியில் தீ விபத்து : இரு குடியிருப்புகள் சேதம்

0
274

நாவலப்பிட்டி நகரசபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு குடியிருப்புகள் சேதமாகின.

தீ பரவலையடுத்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன் உடைமைகள் முழுவதும் தீயில் நாசமாகியுள்ளன.

5ac1e2bcd89aa-IBCTAMIL-600x400

மற்றுமொரு குடியிருப்பு பகுதியவில் சேதமாகியுள்ளது என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்றும் மின் ஒழுகே தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY