நான்கு அடிநீளமான சிறுத்தையின் சடலம் மீட்பு

0
187

ஹற்றன் டிக்கோயா ஹட்லி தோட்டத்தில் கைவிடப்பட்டு காடாக காணப்பட்ட தேயிலை மலையில் இருந்து நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அந்தப்பகுதியால் தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சிறுத்தை மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

சிறுத்தையின் உடலம் உருக்குலைந்த நிலையிலேயே மீட்கப்பட்டது.
இந்தச்சம்பவம் தொடர்பில் சிறுத்தை நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
DSC05241

DSC05248

DSC05248

DSC05256

LEAVE A REPLY