விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

0
193

கலவெல, தம்புள்ளை வீதியில் யடிகல்போத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களின் சடலங்கள் தற்போது தம்புள்ளை மற்றும் கலவெல மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY