உ.பி.யில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்த இளைஞர் அடித்துக் கொலை

0
293

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா(24). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை ஒரு மத விழாவிற்கு கூட்டி சென்றுள்ளார். ஆனால் அன்றிரவு அந்த சிறுமியை வீட்டில் விடாமல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

அந்த சிறுமியை சனிக்கிழமை காலை வீட்டில் விட்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது தாய், தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சென்று, ஜிதேந்திராவை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த ஜிதேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜிதேந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஜிதேந்திரா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை உறவினர்கள் மற்றும் பொதுமக்களே சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY