குவைத்தில் கோர பஸ் விபத்து: 7 இந்தியர்கள் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் மரணம்

0
167

குவைத் நாட்டில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொழிலை செய்து வருகின்றனர்.

அவ்வகையில், புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை இன்று (01) ஏற்றிச்சென்ற பஸ் எதிர் திசையில் வந்த பஸ்சின் மீது பயங்கரமாக நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் 7 இந்தியர்கள், எகிப்து நாட்டை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இரு இந்தியர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(Maalaimalar)

LEAVE A REPLY