16 நாள் குழந்தையை தூக்கிகொண்டு ஓட்டம்பிடித்த குரங்கு கிணற்றில் வீசிக் கொன்ற பரிதாபம்

0
736

ஒடிசா மாநிலத்தில் தாயுடன் உறங்கிய 16 நாள் ஆண் குழந்தையை தூக்கிகொண்டு ஓட்டம்பிடித்த குரங்கு அருகில் கிணற்றில் வீசியதால் இன்று அந்த குழந்தை பிணமாக கண்டெடுக்கப்பட்டது. #Monkey

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்துக்கு கிராமப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று இங்குள்ள டலபட்ஸா என்ற கிராமத்தில் தனது தாயின் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த 16 நாள் ஆண் குழதையை ஒரு குரங்கு தூக்கிச் சென்றது. குழந்தையின் அழுகுரலை கேட்டு பதறித்துடித்த அந்தப் பெண் இதைக்கண்டு பீதீயில் கூச்சலிட்டார்.

கூச்சல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். குரங்கின் கையில் சிக்கியுள்ள குழந்தையை உயிருடன் மீட்க வனச்சரக அதிகாரி தலைமையில் 30 பேர் கொண்ட 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்த குழந்தையால் பெரிதாக குரல் எழுப்பி அழ முடியாததால் குரங்கு அந்த குழந்தையை எங்கே வைத்துள்ளது? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், அருகாமையில் உள்ள கிணற்றில் இன்று குழந்தையின் பிரேதம் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் குதித்து பிரேதத்தை மீட்டனர்.

இந்த சம்பவம் டலபட்ஸா கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY