வங்காளதேசம்; பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

0
164

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பரிசால் என்ற பகுதியை நோக்கி டாக்கா – குல்னா நெடுஞ்சாலை வழியாக இன்று அதிகாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

கோபால்கஞ்ச் மவட்டத்தில் உள்ள முக்சுட்பூர் பகுதியை நெருங்கியபோது ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் கவிழ்ந்து உருண்டது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள பரிட்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன

LEAVE A REPLY