மட்டக்களப்பில் TMVP உறுப்பிணர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

0
227

(அப்துல்சலாம் யாசீம்)

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் போட்டியிட்டு மக்களின் ஆணையுடன் உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (31) சனிக்கிழமை காலை 10.30 மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம், ஆளுநரின் உதவிச்செயலாளர் உ.சிவராசா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதித்தலைவர் கே.யோகவேல், மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் உட்பட மதத்தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

இதன்போது 11 உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 பேர் ஆளுநர் ரோஹித போகல்லாகம முன்னிலையில் ஒற்றுமை, தனித்துவம், ஊழல்அற்ற வகையில் நான் எனது கடமையை செய்வேன் என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.

01

LEAVE A REPLY