ஓட்டமாவடி முஹமட் பிர்னாஸ் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்

0
80

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி – 02ஐ வசிப்பிடமாக் கொண்ட அப்துல் கரீம் முஹமட் பிர்னாஸ் முழு தீவுக்குமான சமாதான நீதிவானாக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அஸ்ஹர் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையிலும் பயின்று அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்து ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அப்துல் கரீம் றாவியா தம்பதியின் மூத்த புதல்வர் ஆவார்.

LEAVE A REPLY