சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் – 5.8 ரிக்டராக பதிவு

0
120

புவியியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் நேற்று 5.8 ரிக்டராக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. #SolomonIslands #Earthquake

ஓனியாரா:

புவியியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் நேற்று 5.8 ரிக்டராக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா தீவுக்கு கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும்.
அந்நாட்டின் தலைநகர் ஓனியாராவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.8 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை

LEAVE A REPLY