ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் காயம்

0
192

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதல்களில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார்.

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதல்களில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து குண்டுகளை வீசியுள்ளனர். பின்னர் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல பூஞ்ச் மாவட்டத்தின் கெர்னி பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

இந்த தாக்குதல்களை அடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY