நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றி கதைத்துக் கொண்டிருக்காமல் நம்பிக்கை தரும் பிரேரணைகள் பற்றி பேசுவது சிறந்தது அமைச்சர் சந்திம வீரக்கொடி

0
238

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,

தற்சமயம் எல்லோர் வாயிலும் நம்பிக்கை இல்லாப் பிரேரணை பற்றிய பேச்சுக்களே அடிபடுகின்றன, ஆனால் நம்பிக்கை தரும் பிரேரணைகள் பற்றிப் பேசுவது நல்லது என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சுற்றுலா வளர்ச்சிக்கான மூலோபாய செயல் திட்டம் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புத் தலைவர் விகடோரியா கொக்லே ஆகியோரால் புதன்கிழமை 28.03.2018 மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் உல்லாச விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டம் உள்நாட்டு யுத்தத்தினால் மூன்று தசாப்தங்களாக பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்தது.

அதன்காரணமாக இந்தப் பிரதேசத்து மக்கள் ஏனைய பகுதி மக்களை விட மிகவும் பின்தள்ளப்பட்டிருக்கின்றாரகள்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்கின்ற வகையில் இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. அதன் மூலம் இந்த நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்ற வாழ்க்கைத் தரத்துக்கு மட்டக்களப்பு பிரதேச மக்களும் வர முடியும்.

அபிவிருத்தி என்பது உட்கட்டமைப்பை மட்டும் குறித்து நிற்காது. அரசாங்கம் என்கின்ற வகையில் நாங்கள் சகல துறைகளையும் இணைத்துக் கொண்ட ஒருங்கிணைந்த அபிவிருத்தியையே மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு முன் நாம் முன்னேற்றமடைய வேண்டுமாயின் எமது பலம் மற்றும் பலவீனங்களையும் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

அபபொழுதுதான் பொருளாதார மேம்பாட்டிற்கூடாக அபிவிருத்தியை நகர்த்தி;ச் செல்ல முடியும்.

பூகோள ரீதியிலும், ஏனைய இயற்கை வளங்களின் அடிப்படையிலும் இது ஒரு சிறப்பான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும்.

அதேவேளை சுற்றுலாத்துறை சார்ந்த அப்pவிருத்தியில் மிகவும் பின்னடைந்த பிரதேசமாக மட்டக்களப்பு உள்ளது.

சுற்றுலாத்துறை சார்ந்த ஒரு கற்கைப் பாடசாலை இந்தப் பிரதேசத்தில் இல்லை. அப்படியானதொரு நிலையத்தை முதலில் ஆரம்பிக்க வேண்டும்.

இது இளைஞர் யுவதிகளுக்கும் பெண்களுக்கும் மிகுந்த பொருளாதார வரப்பிரசாதத்தை ஈட்டித் தரும்.

கலாச்சார ரீதியில் இலங்கையர்களாகிய நாம் சிங்களவராயினும் தமிழராயினும் முஸ்லிம்களாயினும் பெண்களின் பொழுது போக்கு அம்சங்களில் அத்துறை சார்ந்த தொழில் வாய்ப்புக்களில் மிகவும் பின் தங்கியவர்களாக உள்ளோம்.

சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்களாக இருந்தும் அவர்களுக்கான பாதுகாப்பு விருந்தோம்பல் நலன்புரி அம்;சங்களில் நாம் மிகவும் பின்னடைந்தவர்களாக உள்ளோம்.

இந்தப் போக்கை மாற்றியமைக்க வேண்டும். பெண்களின் மனித வளத்தை, அறிவு, திறன், விருத்தி, உற்பத்தி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வெளிக்கொண்டு வருவதற்கு இருக்கும் உளவியல், மனப்பாங்கு கலாச்சார பண்பாட்டு ரீதியான தடைகளை உடைத்தெறிவதற்கு நாம் முன்னேற வேண்டும்.

அபிவிருத்தியின் பங்காளர்களாக பெண்களை நாம் மாற்ற வேண்டும். இதற்கு உல்லாசப் பயணத்துறையில் பெண்களின் ஈடுபாட்டையும் அதிகரிப்பது கொண்டு இதனை நாம் சாதித்துக் காட்ட முடியும்

உல்லாசப் பயணத்துறையில் பணிபுரிவதற்கும் உல்லாசப் பயண பொழுது போக்கு அம்சங்களில் பயமின்றியும், பாதுகாப்புடனும், நம்பிக்கையுடனும் பெண்கள் பங்கெடுப்பதற்குமான சூழலை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நிபுணத்துவம் வாய்ந்ததாக பெண்களின் வளத்தை நாம் பயன்படுத்தி அவர்களையும் இணைத்துக் கொண்டு அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

நீங்கள் எல்லாவற்றையும் அனைவரின் விடயங்களையும் செவிமடுக்க வேண்டும்.

இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் நாம் சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றோம். நாம் வெளியாரை நம்பியிருக்காமல், நாம் தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்ற வேறுபாடும் வித்தியாசமும் காட்டாமல் ஒரே இலங்கையர் என்ற பரந்த மனப்பாங்கில் நமது நடவடிக்கைகளை வடிவமைத்துக் கொண்டால் வளங்கொளிக்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும்.

பெரும்பான்மையினரோடு சேர்ந்து இலங்கையைப் பாதுகாக்க சிறுபான்மையினரும் இணைந்து கொள்ள வேண்டும்.’ என்றார்.

இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் சந்திரசிறி, மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், ‘உள்வாங்கல் வளர்சிக்கான ஆற்றல்’ நிறுவனத்தின் ளுமடைடள கழச ஐnஉடரளiஎந புசழறவா சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் அதிகாரி சந்துனி ஸ்ரீபால, ஆற்றல் திட்டமிடல் முகாமையாளர் ஸ்ரீயானி ஏக்கநாயக்க மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் காந்தி மரினா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் சுற்றுலாத் துறை சார்ந்தோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY