சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

0
191

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரி பிரிவில் சட்டவிரோதமாக லொறியொன்றில் கடத்திச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள் புதன்கிழமை 28.03.2018 அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் லொறியின் சாரதியும் நடாத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மகாஓயா பிரதேசத்திலிருந்து மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு செங்கலடி- பதுளை வீதிவழியாக ஓட்டமாவடி பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த லொறியொன்றை இலுப்படிச்சேனைப் பிரசேத்தில் சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் காணப்படவில்லையென வட்டார வன அதிகாரி என். நடேசன் தெரிவித்தார்.

சுமார் எட்டு அடி நீளமுடைய 78 தேக்கு மரக்குற்றிகள் அந்த லொறியில் காணப்பட்டுள்ளன.

சந்தக நபர்கள் களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் ஆஜர்செய்யபட்டதையடுத்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

MGA_6735

LEAVE A REPLY