காத்தான்குடி மீராபலிகா தேசிய பாடசாலையில் 23 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்

0
158

விசேட நிருபர்

காத்தான்குடி மீராபலிகா தேசிய பாடசாலையில் 23 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.

வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 47 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

இதில் காத்தான்குடி மீராபலிகா தேசிய பாடசாலையில் 23 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 8 மாணவிகள் 9 ஏ சித்திகளையும் மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் 6 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 4 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், அல் ஹிறா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் அல் அமீன் வித்தியாலயத்தில் 2 மாணவிகள் 9 ஏ சித்திகளையும் அந் நாசர் வித்தியாலயத்தில் ஒரு மாணவன் 9 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் எறாவூர் கல்விக் கோட்டத்தில் 15 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுல் 13 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலேயே 47 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY