ஓ எல் றிஷல்ட்ஸ்

0
304

Mohamed Nizous

பெறுபேறு வருவதெல்லாம்
இறைவன் விதியின் படி
மனதில் திடுக்கம் என்ன?
எதுவும் நன்மை தரும்.

நைன் ஏ என்பது எல்லாம்
நான்கு நாளைக்குக் கதைப்பார்
மகன் ஏ மனது உடைந்தால்
மரணம் வரை தாக்கிடும் கவனம்

பெரிசாய் ரிஷல்ட்ஸ் பெற்ற பல பேர்
பின்னாளில் காணாமல் போனார்
முழுசாய் பாஸ் பண்ணா பல பேர்
முன்னேறி வாழ்கிறார் பார்

விழுந்தால் விதையென நினைப்பாய்
எழுந்தால் இறைவனைப் புகழ்வாய்
அழுந்தி அழுதலும் பெருமையும்
ஆகாது அழகல்ல அறிவாய்

பெறுபேறு விசாரிக்கும் ஆட்கள்
ஒருபோதும் உடைக்காதீர் மனதை
ஒரு சிலர் பேசும் வார்த்தை
ஊமையாய்க் கொன்றிடும் வாழ்வை

LEAVE A REPLY