சர்ச்சைக்குரிய வடகொரிய ஜனாதிபதி சீன ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தார்

0
205

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரகசியமாக சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவிலிருந்து ரயில் மூலம் சீனாவின் டேங்டாங் என்ற நகருக்கு புறப்பட்டுச் சென்ற கிம் ஜாங் உன், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பெய்ஜிங் நகருக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

137070779_15221961584761n

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடி சந்திப்பிற்கு வட கொரியா ஒத்துக்கொண்டிருந்த நிலையில் சீனா ஜனாதிபதியுடன் கொரிய ஜனாதிபதியின் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயமாக நோக்கப்படுகின்றது.

137070779_15221963849081n

அணுவாயுத சோதனைகளை நடத்திய உலகநாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வரும் சர்ச்சைக்குரிய வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகு

அதுவும் அவர் முதல்முறையாக சந்திக்கும் முதலாவது வெளிநாட்டு ஜனாதிபதி சீன ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது

137070779_15221968909491n

LEAVE A REPLY