மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானம் வருகை

0
448

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முதலாவது சிவில் விமானம் நேற்று (27) செவ்வாய்க்கிழமை வருகை தந்தது.

மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டதையடுத்து முதலாவது பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானம் நேற்று கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்ததடைந்தது.

பிளே சௌர்ரதன் எனப்படும் இந்த முதலாவது சிவில் விமானத்தில் வருக தந்த பயணிகளை மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள் மலர்களை வழங்கி வரவேற்றனர்.

இதன் போது மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக்க பொன்சேகா மற்றும் பிளே சௌர்ரதன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சமித்த அபேசிங்க உட்பட மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள் பிளே சௌர்ரதன் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து முதல் கட்டமாக பிளே சௌர்ரதன் எனப்படு;ம் உள்ளுர் சிவில் விமானம் வாரத்தில் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டக்களப்புக்கும் கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திற்குமிடையில் சேவையில் ஈடுபடும் என மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக்க பொன்சேகா தெரிவித்தார்.

இந்த விமானம் மேற்படி தினங்களில் காலை 9 மணிக்கு ரத்மனாலை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும். பின்னர் மட்டக்களப்பிலிருந்து மாலை 4மணிக்கு புறப்பட்டு மாலை 5மணிக்கு கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்தை சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரயாணிகளின் தொகைக்கு ஏற்பட ஏனைய விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி பிளே சௌதர்ரன் எனப்படு;ம் இந்த விமானத்திற்காக மட்டக்களப்புக்கும் கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திற்குமிடையில் ஒரு வழிக்கட்டணமாக 100 டொலர் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

01 02 03

LEAVE A REPLY