பட்டம்பெற்று அரச, தனியார் துறைகளில் தொழில் ஒன்றினை பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்களுக்கான “பட்டப்படிப்பும் தொழில் வாழ்க்கையும்”

0
271

(S.சஜீத்)

பல்கலைக்கழங்களில் வர்த்தக, கணித, விஞ்ஞான மற்றும் கலை ஆகிய துறைகளில் பட்டம்பெற்று அரச, தனியார், நிறுவனங்களில் ஓர் தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு எவ்வாறான சவால்களுக்கு எல்லாம் முகம் கொடுக்க நெரிடும், அத்தோடு பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கும் அனுபவ முறையிலான ஊழியர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் எவ்வாறு காணப்படும் என்பது தொடர்பான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வொன்று காத்தான்குடி பல்கலைக்கழக மற்றும் உயர்கல்விக்கான மாணவர்கள் ஒன்றியத்தின் (TEAM) ஏற்பாட்டில் கடநத் 25ம் திகதி TEAM கேட்போர்கூடத்தில் இடம்பெற்றன.

இவ் கருத்தரங்கானது பட்டப்படிப்பும் தொழில் வாழ்கையும் எனும் தொணிப் பொருளில் பிரதான வளாளராக Mr. சுபைர் துல்கிப்லி BBA (Hons) Special in Marketing (SEUSL), MAAT(SL), Senior Marketing Officer, Islamic Businness Unit, AL-Falaah அவர்கள் கலந்து கொண்டு விரிவுரை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மற்றும் உயர்கல்விக்கான மாணவர்கள் ஒன்றியத்தின் TEAM இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானக் கூடியவகையில் அமையப்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக ஒன்றியத்தின் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் SM. ஆஸாத் BBA (Follwing, SEUSL) சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

DSC_0128 DSC_0130

LEAVE A REPLY