அரசியல் கைதிகளின் விடுதலையைக்கோரி போராட்டம்

0
124

(அப்துல்சலாம் யாசீம்)

அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சிவங்கோயிலுக்கு முன்னால் நேற்று (27) மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேடயம் எனும் அரசியல் உரிமைகளுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஜம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவாறு ஆனந்த சுதாகர் எனும் அரசியல் கைதியை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரியும் கடந்த மூன்று தசாப்த காலத்தில் பெறுமதிமிக்க உயிர்களை வகை தொகையின்றி இந்நாட்டு மக்கள் இன மத வேறுபாடற்று இழந்திருக்கின்றோம்.

இந்த இழப்புக்களுக்காக இருப்பவர்கள் இன்றும் கண்ணீர் வடித்தவர்களாகவும், அவற்றை ஈடுசெய்ய முடியாதவர்களாகவும் வாழ்வது வேதனையின் உச்சமெனவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே நல்லாட்சி அரசு இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

DSC_0055

LEAVE A REPLY