வாழைச்சேனையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கு கையெழுத்து

0
265

வாழைச்சேனை நிருபர்

கிளிநொச்சியை சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ச.ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆனந்தசுதாகரனை உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் கையெழுத்து பெறும் நடவடிக்கையில்  செவ்வாய்கிழமை  (27) ஈடுபட்டனர்

இந்நிலையில் கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை வாழைச்சேனை பொதுச் சந்தைப் பகுதி மற்றும் சந்திவெளி பொதுச் சந்தைப் பகுதிகளிலும் மேற்கொண்டனர்.

வாழைச்சேனை மற்றும் சந்திவெளி பொதுச்சந்தை பகுதியில் இடம்பெற்ற கையெழுத்துச் சமரில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டனர்.

01 (10)

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக எந்தவித நிபந்தனைகளுமின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு பகுதிகள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கோறளைப்பற்று பிரதேச மக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய மகஜருடன் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

01 (6) (1) 01 (7) 01 (9) 01 (3)

LEAVE A REPLY