கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வட்டியில்லா கடன் திட்டம்

0
140

(வாழைச்சேனை நிருபர்)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களின் நன்மை கருதி பிரதேச செயலகத்தினால் வட்டி இல்லா கடன் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தியாவட்டவான் கிராம சேவை பிரிவில் இயங்கும் கிராம அமைப்பின் 16 அங்கத்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (26) திங்கட்கிழமை இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் நுண்கடன் திட்டத்தில் கடன்களை பெற்று மக்கள் அதிக வட்டியுடன் கடன் தொகையை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்ககொண்டு வரும் நிலையில் மக்களை கடன் சுமையில் இருந்து மீட்கும் வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வட்டியில்லா கடன் திட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

01 (2)

LEAVE A REPLY