வவுணதீவு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மாடு கடத்தல் முறியடிப்பு!

0
162

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில், சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகளும் அதனை ஏற்றிச் சென்ற வாகனமும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ரி. நஸீர் தெரிவித்தார்.

படுவான்கரை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி நேற்று (26) திங்கட்கிழமை குறித்த மாடுகள் வாகனத்தில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட வேளையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவ் விடயம் தொடர்பில் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

படுவான்கரை பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக காத்தான்குடி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு கால்நடைகளைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளில் கடத்தல் காரர்கள் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் இது குறித்து விழிப்பாக இருந்து பொலிஸாருக்குத் தகவல்களை அளித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

a - vavunathivu (2) a - vavunathivu (3)

LEAVE A REPLY