மட்டு-கொழும்பு சிவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

0
391

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு கொழும்புக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவீனமயப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு கொழும்புக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவில் சிவில் விமானப் போக்குவரத்து கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பொதும் பங்களிப்பு செய்யும் ஒன்றாகும்.

நடுத்தரமானவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இதன் கட்டணத்தை குறைக்க வேண்டும். அது தொடர்பில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஆராயுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குறைந்த கட்டணத்தை அறவிடுகின்ற போதுதான் கூடுதலானோர் பயன்படுத்துவர். எதிர் காலத்தில் அதன் கட்டணத்தில் மாற்றங்களை கொண்டு வரமுடியும்.

அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா அவர்கள் கடந்த அரசாங்கத்திலே நீர்ப்பாசன அமைச்சராக இருந்த போது மட்டக்களப்பிலுள்ள உன்னிச்சை உறுகாம குளங்களை அபிவிருத்தி செய்யுமாறு அவரிடம் கேட்ட போது அதற்காக முதலில் நிதியொதுக்கியவர் அவர்தான்.

அதே போன்று இந்த சிவில் விமான நிலையத்தினையும் இங்கு திறந்து வைத்து இதன் சேவையை ஆரம்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பொருளாராத்தினை கட்டியெழுப்புவதற்கு இந்த விமான நிலையம் சிறப்பான பங்களிப்பை செய்யும் என்றார்.

LEAVE A REPLY