ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர் வசம்பு மீது கத்தி குத்து: வைத்தியசாலையில் அனுமதி

0
937

(முகம்மது அஸ்மி)

2016 செப்டம்பர் 11ம் திகதி ஏறாவூரை உலுக்கிய ஏறாவூர் முகாந்திரம் வீதியை சேர்ந்த தாய், மகள் இரட்டைக் கொலையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட வசம்பு என்றழைக்கப்படும் தில்ஷாத் மீது ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தையில் வைத்து சற்று நேரத்திற்கு முன்னர் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பின் முதுகில் காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படி நபரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ஏறாவூர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வசித்து வந்த தாய் சித்தி உசைரா(55), மகள் ஜெனீரா பானு(31) ஆகியோர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவி்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY