அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏறாவூர் முஸ்லிம்கள் கையொப்ப வேட்டை

0
357

(விஷேட நிருபர்)

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏறாவூர் பி.எஸ்.பி. நண்பர்கள் வட்டத்தினால் கையெழுத்து வேட்டை இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

அரசியல் கைதியான ஆனந்தசுதாரணை விடுதலை செய்து தாயின்றி தவிக்கும் இரண்டு பிள்ளைகளின் கண்ணீரை துடைக்க ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி உதவுமாறு இதன் போது வேண்டுகோள் விடுத்தனர்.

ஏறாவூர் பி.எஸ்.பி. நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கையின் போது பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கையொப்ப மிட்டனர்.

அரசியல் கைதியான ஆனந்தசுதாரனுக்கு ஜனாதிபதியவர்கள் கருணை காட்டி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏறாவூர் பொது மக்களின் கையொப்பங்கள் அடங்கிய கருணை மணுவொன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஏறாவூர் பி.எஸ்.பி. நண்பர்கள் வட்டத்தினர் தெரிவித்தனர்.

இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் இந்த விவகாரம் பார்க்கப்படல் வேண்டும் அதற்காகவே நாங்கள் ஆனந்தசுகதரனின் பொது மன்னிப்புக் கோரி இந்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளோம் என இதன் எற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன் போது முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் உட்பட அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கையொப்பமிட்டனர்.

01 02 03 04

LEAVE A REPLY