யாழ் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள ஜிப்சம் விற்பனை கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

0
493

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (25) மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச்சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் பெற்றோல் குண்டு வெடித்தனால் கடை சிறிதளவு சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தனிப்பட்ட தகறாதே இத்தாக்குதல் மேற்கொள்ள காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

_DSC0030 _DSC0042 _DSC0044

LEAVE A REPLY