மைலம்பாவெளியில் கொள்ளையர்களின் தாக்குதலில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மரணம்

0
394

(முகம்மது அஸ்மி)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி காமாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டக்களப்பை சேர்ந்த தனது நண்பியுடன் காரில் சென்று திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரை மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தருணம் ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் கடமை புரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.எம்.சி. ஹேரத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தலையில் தலைக்கவசத்தால் (ஹெல்மட்) தாக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

52 வயதான குருநாகல் அலவ்வை பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் பரிசோதகரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் துரிதமாக செயற்பட்ட ஏறாவூர் பொலிசார் மைலம்பாவெளி பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

துரித கதியில் களத்தில் இறங்கி குற்றவாளிகளை அடையாளம் காணும் ஏறாவூர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது பாராட்டுக்கள்.

Police IP

LEAVE A REPLY