எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை

0
355

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அதன் தலைவர் தம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஒசி நிறுவனம் நேற்றுமுன்திம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதா என்று பெருபாலானோர் கேள்வி எழுப்புவதாக தலைவர் தெரிவித்தார்.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் லாபத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு தீர்மானம் மேற்கொள்ளும் நிறுவனம் அல்ல. எரிபொருள் விலையை அதிகரித்தல் போன்ற பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தீர்மானத்தை மேற்கொள்ள முன்னரஇ; அது குறித்து பல்வேறு விடயங்களில் ஆழமாக கவனம் செலுத்திஇ அரசாங்கத்துடன் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்திஇ தீர்மானத்தை மேற்கொள்ளும் நடைமுறையை கூட்டுத்தாபனம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று கூட்டுத்தாபன தலைவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY