மட்டக்களப்பு உள்ளக விமான நிலைய செயற்பாட்டு பணிகளும் அதன் சேவைகளும் இன்று ஆரம்பம்

0
114

இது தொடர்பான வைபவம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் இதன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

1958ம் ஆண்டில் சிவில் விமான சேவை திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு உள்ளக விமான நிலையம் 25 வருட காலம் யுத்தம் மற்றும் விமான படையின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. விமான நிலையம் புனரமைக்கப்பட்டுஇ 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையம் நவீனமயப்படுத்துவதற்காக அரசாங்கம் 140 கோடி ரூபாவை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ளக விமான சேவையை மேம்படுத்துவது மற்றும் கிழக்கு மாகாண தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா தொழிலதுறையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த விமான நிலையம்இ சிவில் விமான சேவை அதிகார சபைக்குள் உள்வாங்கப்பட்டது.

LEAVE A REPLY