41 வருட ஆசிரியப் பணியை மனநிறைவுடன் நிறைவு செய்யவிருக்கும் சாமீலா அஸ்ரப் ஆசிரியை

0
1148

மட்டக்களப்பு கோட்டமுனைப் பிரதேசத்தில் பிறந்த ஆசிரியை சாமீலா அஸ்ரப் அவர்கள் 41 வருடகாலம் ஆசிரியப் பணிபுரிந்து இன்று (23) ஓய்வு பெறுகிறார்கள்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 9 வருடங்களாக கணித ஆசிரியையாகக் கடமையாற்றும் இவர்கள் மட்டக்களப்பு கோட்டமுனைக் கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் மட்/இந்துக் கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் தரக் கல்வியை முடித்திருந்த வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் பதியூதீன் முகம்மது அவர்களால் பயிற்றப்படாத விஞ்ஞான கணித ஆசிரியராக 1977.05.12 இல் உறுகாமம் முஸ்லிம் கலவன் பாடசாலையில் முதல் நியமனம் பெற்றார்கள்.

அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியராக கடமையாற்றிய இவர்கள் மட்/சிசிலியா பெண்கள் கல்லூரி, மட்/மைக்கேல் கல்லூரி, மஹியங்கனை பங்கரகமன முஸ்லிம் வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, மட்/கள்ளியங்காடு ஸாஹிரா வித்தியாலயம் மற்றும் மட்/ அந் நாஸர் வித்தியாலயத்திலும் கடமையாற்றியுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான இவர்கள் உப அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

பல கல்விமான்களை உருவாக்கிய அன்னாரின் கல்விப் பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!

WhatsApp Image 2018-03-23 at 10.10.36

LEAVE A REPLY