அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பில் கையொப்ப வேட்டை

0
116

(விஷேட நிருபர்)

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக் கோரி இன்று (23) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை இடம் பெற்றது.

மட்டக்களப்பிலுள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களினாலும் இந்த கையெழுத்தும் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் இடம் பெற்ற இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது சமய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக நலன் விரும்பிகள் பொது மக்கள் இளைஞர்கள் பெண்கள் என பலரும் கையொப்பமிட்டனர்.

இந்த கையொப்பங்களுடன் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யுமாறு கோரிய கருணை மனுவையொன்று மட்டக்களப்பிலிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் அவரது மனைவியின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட போது அவரின் பிள்ளை சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏறிய காட்சி அனைவரையும் கண்ணீர் மல்கச் செய்துள்ளதுடன் தாய் இறந்து போன நிலையில் தந்தை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக இருக்கின்றார் இந்த நிலையில் அந்த குடும்பத்திலுள்ள இருபிள்ளைகளின் பரிதாபத்தை கருத்திற் கொண்டு அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனுக்கு ஜனாதிபதியவர்கள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என கையொப்பமிட்ட சமய தலைவர்கள் பிரமுகர்கள் பொது மக்கள் இதன் போது வேண்டுகோள் விடுத்தனர்.

01 02 03

LEAVE A REPLY