ஓட்டமாவடி-மஜ்மா கிராமத்தில் 3.5 மில்லியன் பெருமதியான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்

0
103

(வாழைச்சேனை நிருபர்)

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதி ஒதிக்கீட்டில் இருந்து 3.5 மில்லியன் பெருமதியான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் ஓட்டமாவடி பிரதேச செலாளர் பிரிவில் உள்ள மஜ்மா கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மஜ்மா கிராம அபிவருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலியின் நிதி ஒதிக்கீட்டில் இருந்து 1.5 மில்லியனுக்கு கொங்ரிட் வீதியும், 2 மில்லியனுக்கு D1 வாய்கால்களையும், வீட்டு திட்ட வீதியையும் இணைக்கும் கள்வெட்டு (மதகு) போன்ற வேலைத் திட்டங்கள் இடம்பெறவுள்ளது.

குறித்த வேலைத் திட்டங்கள் இடம்பெறும் இடங்களை ஓட்டமாவடி பிரதேச செயலக தொழில் நுட்ப உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அகியோர் சென்று பார்வையிட்டதுடன் இதன் வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மஜ்மா கிராம அபிவருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் மேலும் தெரிவித்தார்.

29497551_1222849344514533_5404767968905134080_o WhatsApp Image 2018-03-23 at 12.33.49 PM

LEAVE A REPLY