கிழக்கு மாகாணத்திலுள்ள 32 உள்ளுராட்சி மன்றங்களுக்கான முதல் அமர்வுகள் இம் மாதம் 27ம் திகதி தொடக்கம்

0
98

(விஷேட நிருபர்)

கிழக்கு மாகாணத்திலுள்ள 32 உள்ளுராட்சி மன்றங்களுக்கான முதல் அமர்வுகள் இம் மாதம் 27ம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் 32 உள்ளுராட்சி மன்றங்களில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத தால் இந்த 32 உள்ளுராட்சி மன்றங்களின் முதல் அமர்வுகள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் எதிர் வரும் 27ம் திகதி சம்மாந்துறை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபைகளின் முதல் அமர்வுகளும் அதே போன்று 28ம் திகதி அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு,மற்றும் இறக்காமம் பிரதேச சபைகளுக்கான முதல் அமர்வுகளும், 29ம் திகதி திருக்கோவில், பொத்துவில், லாகுகல ஆகிய பிரதேச சபைகளுக்கான முதல் அமர்வுகளும், ஏப்ரல் மாதம் 2ம் திகதி கல்முனை மாநகர சபை, நாவிதன் வெளி பிரதேச சபைகளுக்கான முதல் அமர்வுகளும், நடைபெறவுள்ளது

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏப்ரல்3ம் திகதி களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, வவுணதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கான முதல் அமர்வுகளும், ஏப்ரல் 4ம் திகதி மண்முனை தெண் எருவில் பற்று, மண்முனைப் பற்று ஆகிய சபைகளுக்கான முதல் அமர்வுகளும், ஏப்ரல் 5ம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் நகர சபை, செங்கலடி பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான முதல் அமர்வுகளும், ஏப்ரல் 6ம் திகதி வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளுக்கான முதல் அமர்வுகளும், ஏப்ரல் 10ம் திகதி வாகரை பிரதேச சபைக்கான முதல் அமர்வும் நடைபெறவுள்ளது.

இதே போன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான முதல் அமர்வு திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சபைகளுக்கான முதல் அமர்வுகள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற வேண்டுமென வர்த்தமாணி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் முன்னிலையில் இதன் முதல் அமர்வுகள் நடைபெறுவதற்கான திகதிகளும் நேரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி சபைகளின் முதல் அமர்வின் போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் முன்னிலையிலேயே சபைகளுக்கான தவிசாளர் பிரதி தவிசாளர் போன்றோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்

இநத சபைகளில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத நிலையிலேயே இவ்வாறு முதல் அமர்வின் போது தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ளது.

எனினும் அக்கறைப்பற்று மாநகர சபை மற்றும் காத்தான்கு நகர சபை உள்ளிட்ட 13 சபைகளில் சில கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் அக்கட்சிகள் தமது கட்சியின் சிபாரிசில் தவிசாளர் பிரதி தவிசாளரை தெரிவு செய்துள்ளது.

அறுதிப் பெரும்பான்மையுள்ள 13 சபைகளுக்கான முதல் அமர்வுகளை அந்த சபைகள் நடாத்தவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாநகர சபைகளும், அம்பாறை, காத்தான்குடி, ஏறாவூர், கிண்ணியா, திருகோணமலை ஆகிய நகர சபைகளும், ஏனைய 37 பிரதேச சபைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY