சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி: அமெரிக்கா அதிரடி

0
109

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்..

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்.

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் இறக்குமதி பொருட்கள் மீது வரி ரீதியால நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியன.

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீன பொருட்களுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “சீனா கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகளால் ஏற்படும் நியாயமற்ற போட்டியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் தேவை”என்று கூறியுள்ளது.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பல்வேறு பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாக இறுதிவரை போராட தயார் என்று அந் நாடு கூறியுள்ளது.

தனது தவறான வர்த்தகக் கொள்கை மூலம் அமெரிக்காவை சீனா ‘பலாத்காரம்’ செய்துவிட்டது என அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் சீனாவை வெளிப்படையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY