பிக்சிங் குற்றச்சாட்டில் இருந்து ஷமி விடுவிப்பு

0
112

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் மனைவி ஹசின் ஜகான் ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் விசாணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினை புகாருடன் கிரிக்கெட் போட்டி பிக்சிங்கிலும் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டார்.

இதனால் பிசிசிஐ மொகமது ஷமியின் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அத்துடன் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் நீரஜ் குமார் விசாரணை நடத்த வேண்டும் என்று சிஓஏ தலைவர் வினோத் ராய் கேட்டுக்கொண்டார்.விசாரணை நடத்திய நீரஜ் குமார் அறிக்கையை சிஓஏ-யிடம் சமர்பித்தது. அப்போது ஷமி பிக்சிங்சில் ஈடுபடவில்லை என்றும், இதுகுறித்து இனிமேல் விசாரிக்க வேண்டியதில்லை என்றும் சிஓஏ முடிவு செய்துள்ளது. இதனால் பிசிசிஐ ‘பி’ கிரேடில் மொகமது ஷமியை சேர்த்துள்ளது. இதனால் ஷமிக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கும்.

LEAVE A REPLY