காத்தான்குடி நகர சபைக்கு 17 உறுப்பினர்களின் பெயர் விபரங்களே வர்த்தமாணியில் பிரசுரிப்பு

0
636

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபை தேர்தலில் பத்து வட்டாரங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களின் பெயர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களின் பெயர்களும் அதே போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரின் பெயரும் வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவான மூன்று உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் மாத்திரமே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் கேட்ட போது முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவான மூன்று உறுப்பினர்களில் இரண்டு ஆண் உறுப்பினர்களையும் ஒரு பெண் உறுப்பினரையும் தெரிவு செய்து தருமாறு கோரியிருந்தோம்.அதற்கு அவர்கள் மூன்று ஆண் உறுப்பினர்களின் பெயர்களையே அனுப்பியிருந்தனர். அதனால் அதில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருந்த பெயர் நீக்கப்பட்டு இரண்டு பெரையே வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண் உறுப்பினரின் பெயரை அனுப்பும் பட்சத்தில் அதனை பிரசுரிப்போம் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சிப்லி பாறூக்கிடம் கேட்ட போது எமது கட்சிக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தது.

தேர்தல் ஆணையாளனரினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி 20 வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சி அல்லது சுயேட்சகை;குழு அத்தோடு மூன்று உறுப்பினர்களுக்கு மேல் பெற்ற கட்சி அல்லது குசேட்சைக்குழு பெண் உறுப்பினரை வழங்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் நாம் 20 வீதத்திற்கு குறைவாக வாக்குகளை பெற்றதாலும் மூன்று உறுப்பினர்களை பெற்றதாலுமே பெண் உறுப்பினரின் பெயரை வழங்க வில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் எமது கட்சி பேசியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைக்கு சிரீலங்கா சுதந்திரக் கட்சியிலில் வட்டாரத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் இரண்டு பெண் உறுப்பினர்களும் வர்த்தமாணியில் பெண் உறுப்பினர்களாக பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY