ஆஃப்கன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குண்டுவெடிப்பு: 29 பேர் பலி

0
181

ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடந்த சந்தேகத்திற்குரிய தற்கொலை குண்டுதாரி நடத்திய வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 29 பேர் மரணமடைந்தனர், 18 பேர் காயமடைந்தனர்

ஆஃப்கன் புத்தாண்டான `நவ்ரஷ்` – ஐ கொண்டாட நூற்றுகணக்கானோர் திரண்டிருந்தனர். அந்த கூட்டத்ததில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
_100508586_879b5817-8151-48bd-85cc-1dab674af7f7
அந்த கூட்டத்தில் இருந்த சிறுபான்மை ஷியா சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்று அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷகி திருதளத்தை நோக்கி நடந்து வந்த தற்கொலை குண்டுதாரி, குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்

LEAVE A REPLY