மட்டக்களப்பில் பொலீஸ் விரர்கள் தினம் அனுஷ்டிப்பு

0
204

(விசேட நிருபர்)

இது வரை 3118 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயயசேகர தெரிவித்தார்.

154 வது பொலீஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பில் (21.3.2018) புதன்கிழமை அனுஷ்டிக்கப்ப்பட்டது.

இதன் போதே கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னாள் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயயசேகர மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் உட்பட களுவாஞ்சிகுடி வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சமய பிரமுகர்கள் உயிர் நீத்த பொலிசாரின் குடும்ப உறவினர்கள் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_7837

இதன் போது அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயயசேகர,

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 457 பொலிசார் உயிரிழந்துள்ளனர்.

21.3.1864ம் ஆண்டு சபான் எனும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொலப்பட்டார். அவர் உயிரிழந்த நினைவு நாளை பொலிஸ் வீரர்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த கால யுத்த சூழ் நிலையின் போதும் பல் வேறு சம்பவங்களின் போதும் கொல்லப்பட்டு உயிரிழந்த பொலிசாரின் நினைவு நாளாக இந்த நாளை அனுஷ்டிக்கின்றோம்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

DSC_7815 DSC_7804 DSC_7836

LEAVE A REPLY